இடைக்கால கணக்கறிக்ைக இன்று சபையில் சமர்ப்பிப்பு

2019: முதல் நான்கு மாதங்களுக்கு ரூ.1,765 பில். ஒதுக்கீடு; விலைச்சூத்திரம் மீண்டும் அமுல்

2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நேற்று அமைச்சரவையில் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதங்களுக்காக 1,765 பில்லியன் ரூபா அரச செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர,

2019 முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்தார்.

அமைச்சரவை பதவியேற்றதையடுத்து நேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால கணக்கறிக்கை முதலாவது யோசனையாக நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

நிதி அமைச்சு அலுவலகத்தில் நேற்று அமைச்சுப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்ெகாண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மங்கள மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காகவே மேற்படி நிதி செலவிடப்படவுள்ளது.

இதற்கிணங்கவே 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நான்கு மாதங்களுக்காக 1,765 பில்லியன் அரச செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் 970 பில்லியன் ரூபா கடன் தவணைகளை செலுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான செலவில் 55 வீதத்தை கடன் செலுத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பொருளாதாரம் மற்றும் கிராமிய மேம்பாடு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிமுகப்படுததப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட “கம்பெரலிய” செயற் திட்டமும் ‘ஒரு கிராமத்திற்கு ஒரு வேளைத் திட்டம்’ என்ற வேலைத்திட்டமும் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி கூடிய அமைச்சரவையினால் நிறுத்தப்பட்டிருந்தன.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புதிய அரசாங்கம் நியமிக்கப்படாதிருந்தால் 2019 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான சம்பளம், உர மானியம், பாடசாலைகளுக்கான சீருடை சமுர்த்தி நிவாரணம் ஆகிய நலன்புரி செயற்பாடுகள் நிறுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இடைக்கால கணக்கறிக்கை மூலம் குறிப்பிட்ட சகல வேலைத் திட்டங்களும் மீள ஆரம்பிக்கவுள்ளதுடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதோடு நாடு முழுவதுமுள்ள 40 இலட்சம் மாணவர்களுக்கும் பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி இடைக்கால கணக்கறிக்கை மூலம் மீண்டெழும் செலவிற்காக 480 பில்லியன் ரூபாவும் மூலதன செலவிற்காக 310 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் 2019 க்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Fri, 12/21/2018 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை