பிரபலமிக்க பாடசாலை வீரர் வீராங்கனைகளிடையே சுகித, சித்மி முன்னணியில்

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை மதிப்பீடு செய்யும் வருடத்தின் முன்னணி விருது வழங்கும் விழாவான சண்டே ஒப்சேவர் - -மொபிடெலின் வருடத்தின் பாடசாலை பாடசாலை கிரிக்கெட் விளையாட்டு வீரர் விருது விழாவின் 41வது நிகழ்வின் இரண்டாவது வாரத்திலும் 1679 வாக்குகளைப் பெற்று பிரபலமிக்க பாடசாலை கிரிக்ெகட் விளையாட்டு விருதினை நோக்கிச் சென்ற வீரர்களிடையே மொரட்டுவ சென் செபஸ்தியன் கல்லூரியின் மாணவன் சுகித மனோஜ் முன்னணி வகித்தார்.

இந்நாட்டின் பாடசாலை கிரிக்கெட் களத்தில் சாதனைகளை மதிப்பீடு செய்து இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த முதலாவது விருது விழாவின் 41வது நிகழ்வு அடுத்த வருட நடுப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

அண்மையில் தொடங்கப்பட்ட 41வது விருது விழாவிற்கு தொடர்ச்சியாக 11வது தடவையாகவும் அனுசரணையினை வழங்கி ஸ்ரீ லங்கா மொபிடெல் நிறுவனம் தேசிய பணியொன்றிற்கு தோல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

தேசிய பாடசாலை கிரிக்கெட் களத்தின் எதிர்கால நட்சத்திரமாகப் பிரகாசிப்பார் என எதிர்வு கூறப்பட்டுள்ள 16 வயதுடைய சுகித மனோஜ் அண்மையில் நிறைவடைந்த 17 வயதின் கீழ் பாடசாலைகளுக்கிடையிலான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டதோடு இம்முறை சென் செபஸ்தியன் கல்லூரியின் முதல்தர குழுவில் முதல் தடவையாக இணைந்து கொண்டுள்ளார்.

சுகிதவின் அற்புதமான சாதனைகளினால் வெற்றி வாசலைத் திறந்து கொண்ட சென் செபஸ்தியன் கல்லூரி அணி இந்தப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஆட்டமிழக்காமல் தகுதி பெற்றது. எனினும் இறுதிப் போட்டியில் மருதானை சென் ஜோசப் கல்லூரி அணியிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தோடு திருப்தி அடையும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அந்தப் போட்டியில் மூன்று சதங்களுடன் 714 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான சாதனையினை நிலைநாட்டிய சுகித இடது கை துடுப்பாட்டத்தில் ஈடுபடும் விக்கெட் காப்பாளராவார்.

கடந்த வருடத்தில் 15 வயதின் கீழ் பிரிமா கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது கொழும்பு தெற்கு வெளி மாகாண அணியின் தலைமையினை வகித்து இரண்டாமிடத்தை நோக்கி தனது அணியினைக் கொண்டு சென்று சிறந்த துடுப்பாட்டக்காருக்கான விருதினையும் பெற்றுக் கொண்டார்.

41வது 'சண்டே ஒப்சேவர் -- மொபிடெலின் வருடத்தின் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழாவின் பிரபலமிக்க விளையாட்டு வீரருக்கான விருதினை நோக்கிச் சென்ற வீரர்களிடையே சுகிதவுக்கு அடுத்ததாக 1526 வாக்குகளைப் பெற்று பம்பலப்பிட்டி சாந்த பீதர கல்லூரியின் மாணவன் சந்தூஸ் குணதிலக இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதோடு, கல்கிஸ்ஸ சாந்த தோமஸ் கல்லூரி அணியின் கலன பெரேரா 1401 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். அந்தப் பட்டியலில் நான்காம் இடம் நாலந்தா கல்லூரி அணியின் எம். ஏ. லக்ஷிதவுக்கு கிடைத்திருந்ததோடு அவர் 1386 வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். அத்துடன் ஐந்தாவது இடம் 1140 வாக்குகளைப் பெற்ற டிரினிட்டி கல்லூரியின் மாணவன் அபிஷேக அனந்தவுக்கு கிடைத்தது.

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டு வீரர்களைப் போன்று பாடசாலை கிரிக்கெட் வீராஙகணைகளுக்கும் விருதுகளை வழங்கும் முன்னணியாளராக ஒப்சேவர் மற்றும் மொபிடெல் நிறுவனம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதோடு, அடுத்த வருடத்தில் இடம்பெறும் 41வது விருது வழங்கும் வைபவத்திலிருந்து பாடசாலை கிரிக்கெட் விளையாட்டு வீராங்கனைகளுக்காக வழங்கப்படும் விருதுகளிடையே முக்கிய விருதாக ஆகியுள்ள வருடத்தின் புகழ்பெற்ற பாடசாலை கிரிக்கெட் வீராங்கனை விருதினை நோக்கிச் சென்ற வீராங்கனைகளுக்கிடையில் நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் சித்மி ஹிராஷா முன்னணியாளராக ஆகியுள்ளார். இரண்டாவது வார இறுதியில் அவள் 323 வாக்குகளைப் பெற்று முன்னணி வகித்ததோடு ரத்கம தேவபத்திராஜ வித்தியாலய மாணவி சத்யா சந்தீபனி 186 வாக்ககளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்த விருதுக்காக அவதானிக்கப்படும் லேக் ஹவுஸ் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கூப்பனை பூர்த்தி செய்து அனுப்பி விருது வழங்கும் விழாவிற்கு பங்களிப்பை வழங்கும் வாசகர்களிடையே இரண்டாவது வாரத்தின் வெற்றியாளராகி மொபிடெல் 4G ரவுட்டரை வென்றவர் நாரஹேன்பிட்ட கொழும்பு மாவட்டச் செயலகத்தின் எம். ஏ. என். குமான் என்பவராகும். இதற்குப் புறம்பாக மொரட்டுவ, உஸ்வத்தை வீதி இல. 35/4 என்ற முகவரியில் வசிக்கும் சுமித் பிரசன்ன என்பவர் 2500 ரூபாவுக்கான முதல் பரிசை பெற்றுக் கொண்டதோடு, கொழும்பு 5, ரெயில்வே மாவத்தை, இல.111 என்ற முகவரியில் வசிக்கும் முஹம்மது மௌஜூத் என்பவர் இரண்டாம் இடத்தைப் பெற்று 1500 ரூபாவை பரிசாகப் பெற்றுக் கொண்டார். 1000 ரூபாவுக்கான மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர் வெலிவேரிய, தெற்கு அம்பரளுவ, குணவர்தன மாவத்தை இல. 490/2 என்ற முகவரியைச் சேர்ந்த துமிந்த ரஷ்மிக என்பவராகும்.

 

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை