இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் ஜொனதன் லூயிஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து டர்ஹம் பிராந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஜொனதன் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஜொனதன் லூயிஸியின் பயிற்றுவிப்பின் கீழ் டர்ஹம் பிராந்திய கிரிக்கெட் அணி 2013ம் ஆண்டு கவுண்டி சம்பியன் கிண்ணத்தையும், 2014ம் ஆண்டு ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத்தையும், 2016ம் ஆண்டு நெட்வெஸ்ட் இருபதுக்கு 20 ரன்னர்அப் கிண்ணத்தையும் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் அணிகளில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ள ஜொனதன் லூயிஸ் எஸ்ஸக்ஸ் பிராந்திய அணியில் 1990 --1996 வரை விளையாடியுள்ளார். இதில் 1995ம் ஆண்டு அணித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் டர்ஹம் அணியில் இணைந்து கொண்ட ஜொனதன் லூயிஸ் 1997--2006 வரை விளையாடியுள்ளார். இதில் 2001--2004 வரை அணித்தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

வலது கைத்துடுப்பாட்ட வீரராகவும், மிதவேகப் பந்துவீச்சாளராகவும் உள்ள ஜொனதன் லூயிஸ் 205 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 10,281 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அட்டாளைச்சேனை விசேட நிருபர்

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை