அண்டார்டிகாவை தனியே கடந்த அமெரிக்க வீரர்

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதாகும் தடகள வீரரொருவர் தனியாக, எவ்வித உதவியுமின்றி அண்டார்டிகாவை கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தனக்கும் பிரிட்டனின் இராணுவ கேப்டனான 49 வயதாகும் லுவிஸ் ரூட்டுக்கும் இடையில் நடந்த கடுமையான போட்டியில் கொலின் ஓப்ராடி வெற்றி பெற்றுள்ளார். தனது இலக்கை 53 நாட்களில் கொலின் அடைந்தார்.

இவருவருக்கிடையேயான போட்டி கடந்த நவம்பர் 3ஆம் திகதி ஆரம்பமானது. இதே பகுதியில் இதே மாதிரியான போட்டியில் ஈடுபட்ட பிரிட்டன் இராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் இரண்டாண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியில் மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையும், அதிக ஆபத்துகளும் நிறைந்த அண்டார்டிகாவின் 1,482 கிலோமீற்றர் தூரத்தை இவர் 53 நாட்களில் கடந்துள்ளார்.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை