சிரிய குர்திஷ்களுக்கு எதிராக துருக்கி ஆதரவுப்படை குவிப்பு

சிரிய குர்திஷ் படைகளுக்கு எதிராக துருக்கி புதிய இராணுவ நடவடிக்கை ஒன்று பற்றி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் வடக்கு சிரியாவின் மன்பிஜ் நகருக்கு வெளியே துருக்கி ஆதரவு படை குவிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

குர்திஷ்களுக்கு எதிராக சிரியாவில் மற்றொரு படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வது குறித்த அறிவிப்பை துருக்கி டிசம்பர் நடுப்பகுதியில் வெளியிட்டது.

குர்திஷ்களின் ஆதரவு அமெரிக்க துருப்புகள் சிரியாவில் இருந்து வாபஸ் பெறும் அறிவிப்பு அந்தப் படைக்கு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்பையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் துருக்கி ஆதரவு துரப்புகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் படைகளை குவித்து வருவதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம் துருக்கியும் தனது நாட்டு எல்லையில் படைகளை குவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றுக்கான இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படுவதாக துருக்கி ஆதரவு கிளர்ச்சி கூட்டணியில் உள்ள அல் ஜெயிஷ் அல் வதானி போராளிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 12/28/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை