இலங்கை ஒருநாள்,ரி20 அணித்தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு ரி20 போட்டிகளைக் கொண்ட தொடர் இன்று (15) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடர் ஆரம்பமாகவுள்ளன.

இப்போட்டிகளுக்கான டெஸ்ட் அணி ஏற்கனவே நியூசிலாந்து சென்றிருந்த நிலையில் ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியின் தலைவராக லசித் மாலிங்கவும் உபதலைவராக நிரோஷன் திக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை நீண்ட காலமாக அணியில் இடம்பெறாதிருந்த சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன மற்றும் தசுன் சானக ஆகியோரும் இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை அணி

லசித் மாலிங்க (தலைவர்)

நிரோஷன் திக்வெல்ல

(உப தலைவர்)

அஞ்சலோ மெத்திவ்ஸ்

தினேஸ் சந்திமால்

குசல் மெண்டிஸ்

குசல் ஜனித் பெரேரா

அசேல குணரத்ன

தனஞ்சய டீ சில்வா

திசர பெரேரா

தசுன் சானக

லக்‌ஷான் சந்தகன்

சீக்குகே பிரசன்ன

துஷ்மந்த சமீர

கசுன் ராஜித

நுவன் பிரதீப்

லஹிரு குமார

அஸாப் மொஹம்மட்

Sat, 12/15/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை