சம்மாந்துறையில் “சென்றாலியன் நடைபவனி”

 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து 110 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய “சென்றாலியன் நடைபவனி” நேற்றுமுன்தினம் (22) அதிபர் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

“எமது பாடசாலை நமது பெருமை” எனும் தொனிப்பொருளினான அலங்கார ஊர்த்தி மற்றும் பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்ட நடைபவனி பாடசாலை முன்றலிருந்து ஆரம்பமாகி பொலிஸ் வீதி, மல்கம்பிட்டி வீதி மற்றும் அம்பாறை வீதி வழியாகச் சென்று மீண்டும் பாடசாலை முன்றலில் நிறைவு பெற்றது.

இந்த நடைபவனியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிய செயலாளர் எம்,ஐ. அமீர், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை கிழக்கு தினகரன் நிருபர்

Mon, 12/24/2018 - 11:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை