கூட்டு ஒப்பந்தத்திலிருந்து தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும். அதேநேரம், சகல தரப்பினருடன் ஒரே மேசையிலிருந்து பேசி முடிவெடுத்து அரசுக்கும் முதலாளிமாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமைச்சர் திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேவையேற்படும் பட்சத்தில் அமைச்சுப்பதவியையும் துறக்கவும் தான் தயாரென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவியை மீண்டும் பெற்றுக்கொண்டுள்ள அமைச்சர் திகாம்பரத்துக்கு ஹற்றன் நகரில் பிரமாண்டமான வரவேற்பு பேரணி நேற்று(23) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர், ஹட்டன் நகரின் மணிக்கூண்டு கோபுரத்துக்கருகில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நியாயம் எப்பக்கம் இருக்கின்றதோ அங்கு திகா, மனோ, திலகர் ஆகியோர் உறுதியாக நிற்பர். விட்டு சென்ற அமைச்சும் அந்தஸ்த்தும் மீண்டும் கிடைத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நாம் செய்த அபிவிருத்திகள் யாவும் தடைபட்டன. அதனை மிக வேகமாக அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

இதுவரை வீடுகள் அமைத்து வந்தோம். இப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய திகா,திலகர், உதயா ஆகியோர் தயாராக உள்ளோம் என தெரிவித்த அவர், ஹற்றன் நகர அபிவிருத்தியில் பிரதான வீதிகள் காபட் முறையில் செப்பனிடப்படும் எனவும் உறுதியளித்தார்.

ஹற்றன் சுழற்சி நிருபர்
 

Mon, 12/24/2018 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை