வில்பத்து வனத்தினுள் சிக்கிய 68 சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

வில்பத்து சரணாலயத்தின் அடர்ந்த காட்டில் சிக்கிய சுற்றுலா பயணிகளை புத்தளம் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளும் இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகளும் மீட்டுள்ளனர்.

இரத்தினபுரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 5 நாள் சுற்றுலா சென்ற பஸ், வில்பத்து சரணாலயத்தினூடாக செல்கையில் கடும் மழையினால் சேற்றில் சிக்கியுள்ளது. அதில் சிறுவர்கள் உட்பட 67 பேர் பயணித்துள்ளனர். இது தொடர்பாக முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக செயற்பட்ட புத்தளம் இடர் முகாமைத்துவ பிரிவு இராணுவத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. கடும்பிரயத்தனத்திற்கு மத்தியில் காட்டுக்குள் சிக்கியிருந்த பயணிகள் மீட்கப்பட்டு எலுவங்குளம் இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டு தேவையான அவசர வசதிகள் அளிக்கப்பட்டன.

இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பஸ் சாரதி தனுக, 21 ஆம் திகதி மாலை 4 மணிக்கு எலுவங்குளம் நுழைவாயினூடாக செல்கையில் பாதை சிறப்பாக இருந்தது. தடையின்றி செல்கையில் இடைநடுவில் மழை ஆரம்பித்தது. பாதை முழுவதும் சேறானது. முன்னோக்கி செல்ல முற்பட்ட போது பஸ் சேற்றுக்குள் புதைந்தது. அனைவரும் அநாதரவாக இருந்தோம். இரவில் என்ன செய்வது என்று புரியாமல் காட்டிற்குள் சிக்கியிருந்தோம். ஆனால் கடற்படையினர் எமது பாதுகாப்பிற்காக வந்தனர். இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் வந்து எம்மை மீட்டனர். பஸ்ஸை வெளியில் எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

Mon, 12/24/2018 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை