வர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தினால் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு விசேட கௌரவம்

கொழும்பு 07இல் அமைந்துள்ள வர்த்தக சேவை கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டரங்கு மற்றும் போசனசாலைகளை உள்ளடக்கிய புதிய கட்டடதிறப்பு விழாவில் 40 வருடகால வரலாற்றைக் கொண்ட இலங்கை கிரிக்கெட்டுக்காக சேவையாற்றிய முக்கிய 8 வீரர்களின் புகைப்படங்கள் திரைநீக்கம் செய்து கௌரவிக்கப்பட்டன.

இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்த்து கிடைத்த பிறகு நடைபெற்ற முதலாவதுடெஸ்ட் போட்டியில் அணித் தலைவராக முதல் டெஸ்ட் பந்துக்கு முகங்கொடுத்து முதலாவது டெஸ்ட் ஓட்டத்தைப் பெற்றுக் கொண்ட பந்துல வர்ணபுரவின் புகைப்படம் முதலில் அவருடைய கரங்களினால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

அதன் பிறகு, இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரரான ரோய் டயஸ்,டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இலங்கைஅணியின் தலைவராகசெயற்பட்டவரும், 2 இன்னிங்ஸ்களிலும் 2 சதங்களைக் குவித்த முதல் இலங்கை வீரரான துலிப் மெண்டிஸ் ஆகியோரது புகைப்படங்களும் திரை நீக்கம் செய்யப்பட்டன.

அத்துடன், இலங்கை அணி பங்கேற்றமுதல் டெஸ்ட் போட்டியிலும் 100 ஆவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடியஒரேயொருவீரரும்,டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக முதலாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தவரும், 1996 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான கெப்டன் கூல் என்று அழைக்கப்படுகின்ற அர்ஜுன ரணதுங்கவும் கௌரவிக்கப்பட்டார்.

அதுமாத்திரமின்றி,டெஸ்ட் அரங்கில் 12 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை வேகமாகக் கடந்தவரும், இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகஓட்டங்களைக் குவித்தவருமான இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார,உலக டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முத்தையா முரளிதரன்,ஒருநாள் அரங்கில் இன்னிங்ஸ் ஒன்றில் 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதல் வீரரான சமிந்தவாஸ் மற்றும் ஒருநாள் அரங்கில் 3 தடவைகள் ஹெட்ரிக் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஒரேயொரு வீரரும், 2014ஆம் ஆண்டுநடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கையின் அணியின் முன்னாள் தலைவருமான லசித் மாலிங்க உள்ளிட்ட வீரர்களது புகைப்படங்களும் இவ்வாறு வர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தின் புதிய கட்டடத்தில் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டன.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடம்பெற்ற இவ்விசேட வைபவத்தில் பந்துல வர்ணபுர,ரோய் டயஸ்,சமிந்தவாஸ் மற்றும் லசித் மாலிங்க ஆகியவீரர்கள் பங்குபற்றியிருந்ததுடன்,தத்தமது புகைப்படங்களையும் திரைநீக்கம் செய்து வைத்திருந்தமைமற்றுமொரு சிறப்பம்சமாகும்.

1911 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட வர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தினால் அன்று முதல் இன்று வரை பலவீரர்கள் தேசியமட்டத்தில் உருவாக்கப்பட்டனர்.அத்துடன்,வருடாந்தம் ஏ,பி,சி, டீ,மற்றும் ஈஎன 5 பிரிவுகளில் சுமார் 700இற்கும் அதிகமான கிரிக்கெட் போட்டிகளையும் அந்த சங்கத்தினால் முன்னெடுத்து வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க. 107 வருடகால வரலாற்றைக் கொண்ட வர்த்தகசேவைகிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரொஷான் இத்த மல்கொட, உப தலைவர் நளீன் விக்ரமசிங்க உள்ளிட்டபலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

(பீ.எப் மொஹமட்)

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை