2018 பந்தயப் போட்டியை வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்த இலங்கையின் எஷான் பீரிஸ்

மலேசியாவின் எலைட் ஸ்பீட்வே சேர்க்கிட்டில் கடந்த வார பெற்ற ஆறாவதும் இறுதியுமான ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் ஏசியா கார் பந்தயப் போட்டியை எஷான் பீரிஸ் வெற்றிபெற்று இவ்வருட பந்தயங்களை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் ஏசியா இறுதிப்போட்டி மந்தமான காலநிலையுடனேயே ஆரம்பமானதுடன், மூன்றாவது சுற்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கடுமையான மழைத்தூறல்கள் ஆரம்பிக்கவே DD2 பந்தய வீரர்கள் ஈரப்பதமான வீதிக்குப் பயன்படுத்த முடியாத டயர்களுடன் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எனினும், எஷானின் ஈரப்பதமான வீதியில் செலுத்தக்கூடிய திறமையானது, செனா சுலைமான் நூரை பின்தள்ளச் செய்தது. பதின்மூன்றாவது சுற்றில் சறுக்கக்கூடிய நிலைமை போட்டியை ஆபத்தாக்கியதுடன், 16வது சுற்றின்போது அதிகாரிகள் போட்டியை முடிவுக்குக் கொண்டுவந்தனர். எஷான் மூன்று செக்கன்களால் வெற்றியை அடைந்தார். இந்த வெற்றியுடன் எஷான் 2018ல் நடைபெற்ற ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் போட்டிகள் முழுவதிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் நவம்பர் மாத இறுதிப்பகுதியில் பிரேஸிலில் நடைபெறவுள்ள ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் உலக இறுதிப் போட்டியில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த வருடத்தில் சேப்பாங்கில் நடைபெற்ற 2018 ரொடெக்ஸ் இன்விடேஷன் போட்டியில் முதலாவது இடத்தை எஷான் பெற்றிருந்தார். 2018 X30 தென்கிழக்கு ஆசிய போட்டித் தொடரை அவர் இரண்டாவது இடத்தைப் பெற்று பூர்த்திசெய்தார். F4 தனி ஆசன கார்ப்பந்தயத்தில் முதன் முதலில் கலந்துகொண்டதன் ஊடாக இதில் இணைந்துகொண்டார். ஆசிய பேர்முலா ரெனால்ட் சம்பியன்ஷிப் போட்டியில் கேடய வெற்றியை உறுதிப்படுத்தியதன் மூலம் இலங்கைக்கு ஓரிடத்தை உருவாக்கினார்.

அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வுகளை மேற்கொண்டுள்ள எஷான், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள FIA Asia formula 3 championship போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். மலேசியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவரான எஷான், கார்ப்பந்தயப் போட்டிகளுடன் படிப்பையும் தடையின்றி தொடர்ந்து வருகிறார். ரொடெக்ஸ் மக்ஸ் சலஞ்ச் ஏசியா போட்டியை வெற்றியுடன் பூர்த்திசெய்த பின்னர் கருத்துத் தெரிவித்த எஷான், இந்தவருடப் போட்டிகளை வெற்றியுடன் நிறைவுசெய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். தனது முகாமையாளர் அரோன் லிம், மேக்கானிக் விக்கி சில்வர், தனது குழுவான ஆர்எல் கார்ட் ஆகியோருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார். 'எப்பொழுதும் தனக்குப் பின்னால் இருப்பவரான' தனது தந்தையும், தனது வாழ்க்கை போட்டியில் வெற்றியாளருமான டேவிட் பீரிஸுக்கு அவர் விசேட நன்றியைக் கூறினார்.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை