கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் −2018

ஆண்கள் பிரிவில் கடற்படை, பெண்கள் பிரிவில் திருகோணமலை அணிகள் சம்பியன்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ் மாகாணத்தில் Beach Volleyball விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்திற்கமைவாக மாகாண சுற்றுலா பயணிகள் அதிகார சபையின்

அனுசரணையுடன், விளையாட்டுத்திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

“கடற்கரை கரப்பந்து ஆளுநர் வெற்றிக்கிண்ணம் -2018” மாகாண இறுதிப் போட்டி நிகழ்வு நேற்று மாலை ( 06 ) திருகோணமலை கடற் கரையில் கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா தலைமையில் ஆரம்பமானது.

திருகோணமலை கடற்படை ஆண்கள் பிரிவும், திருகோணமலை -ஏ பெண்கள் பிரிவும் ஆளுநர் கிண்ணத்தை மாகாண சம்பியன்களாக சுவீகரித்துக் கொண்டது. 21:18 என்ற கணக்கில் திருகோணமலை கடற்படை ஆண்கள் பிரிவு சம்பியனானது.21:10 என்ற அடிப்படையில் திருகோணமலை -ஏ பெண்கள் அணி சம்பியன்களாக முடி சூடிக் கொண்டது. கடற்கரை கரப்பந்து என்ற தொனியில் அமைந்த கிழக்கு ஆளுநர் கிண்ணத்துக்கான வெற்றிக்கேடயங்கள் மற்றும் கொடிகள் கடற்படை மூலமாக கடல் மார்க்கமாக குறித்த இடத்துக்கு வெகு விமர்சையாக கொண்டு வரப்பட்டது. கடல் வழி மார்க்கம் மூலமாக கொண்டு வரப்பட்ட கொடிகள் நாட்டின் தேசிய கொடியை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம மாகாண கொடியை மாகாண விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டாவும், மாகாண விளையாட்டு கொடியை மாகாண விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸூம் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைத்தார்கள்.

விளையாட்டு வெற்றிக் கிண்ணங்களை மாகாண விளையாட்டு பணிப்பாளர் கிழக்கு ஆளுநருக்கு அறிமுகம் செய்து நினைவுச் சின்னம் ஒன்றை மாகாண ஆளுநருக்கு விளையாட்டு பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாணத்தின் மூவின மக்களுக்குமிடையில் ஒரு நல்லினக்க போட்டியாகவும் இது கருதப்படுகிறது. முப்படைகளான கடற்படை,தரைப்படை, விமானப்படை, பொலிஸ் போன்ற அணிகளும் இப் போட்டியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆண்கள் பிரிவுகளை கொண்ட 30 அணியினரும் 10 பெண்கள் அணிகளும் பங்குபற்றின. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இறுதி மாகாண சுற்றுக்கு ஆண்கள் அணி 04 ம் பெண்கள் அணி 04 உம் தெரிவு செய்யப்பட்டன.

மாவட்ட அடிப்படையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெற்று கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

கடந்த மாதம் 28.29 ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட போட்டிகள் கல்லடி கடற் கரையிலும் 29,30ம் திகதிகளில் அம்பாறை மாவட்ட போட்டிகள் அட்டாளைச் சேனை கடற்கரையிலும் 3,4 ம் திகதிகளில் திருகோணமலை போட்டிகள் திருகோணமலை கடற்கரையிலும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி கேடயங்களை வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயக் குமார், மாகாண உள்ளூராட்சி மற்றும் முதலமைச்சின் செயலக செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முதுபண்டா, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், ஆளுநரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், வீர, வீராங்கனைகள் என பலரும் பங்கேற்றார்கள்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை