அணை உடைப்பினால் உக்ரைனில் அவசரநிலை

உக்ரைனின் கெர்சன் வட்டாரத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நோவா காகோவ்கா அணை தகர்க்கப்பட்டதால் ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள அந்தப் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றித் தவிப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்தார்.

கெர்சன் வட்டாரத்தில் நீர்மட்டம் அபாயகர அளவை எட்டிவிட்டது. அங்கு சில வாகனங்கள் நீரில் கிட்டத்தட்ட முழுமையாக மூழ்கியுள்ள வீடியோக்களை உக்ரைனியத் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டது. உக்ரைனின் நிப்ரோ ஆற்றில் வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஆற்றோரப் பகுதிகளில் வசிக்கும் 42,000க்கும் அதிகமானோர் அபாயத்தில் உள்ளனர். வீட்டுக் கூரைகளிலும் மரங்களிலும் மக்கள் மீட்புப் பணியாளர்களுக்காகக் காத்திருக்கின்றனர். நோவா காகோவ்கா நகரில் 7 பேரைக் காணவில்லை.

உடைப்பு ஏற்பட்ட அணை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பகுதியில் உள்ளது. இதனால், இந்த அணையை உக்ரைன் தகர்த்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, அணையை ரஷ்யா தகர்த்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது.

Fri, 06/09/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை