பாடசாலை உதைபந்தாட்டத்தை தொடர்ச்சியாக 12 ஆவது வருடமாக நடத்தும் CBL சமபோஷ

நாட்டிலுள்ள 14 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு பன்னிரண்டாவது வருடமாகவும் தொடர்ச்சியாக CBL சமபோஷ அனுசரணை வழங்குகிறது. இலங்கை பாடசாலைகளின் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் (SSFA)

ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்படும் 'CBL சமபோஷ 14 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட சம்பியன்ஷிப் 2023' போட்டிகள் இம்மாதம் ஆரம்பமாகின்றன.

12,000 மாணவர்கள் இதில் பங்கேற்க இருப்பதுடன், இந்த நிகழ்வு பல ஆண்டுகளாகப் பெற்ற அமோக வரவேற்பு இதன் ஊடாக வெளிப்படுகிறது. நாடு முழுவதிலுமுள்ள 25 மாவட்டங்களில் அமைந்துள்ள 32 நிலையங்களில் 470 ஆண்கள் அணிகளும், 130 பெண்கள் அணிகளும்

காணப்படுகின்றன. ஆண்கள் அணிகளும், 24 பெண்கள் அணிகளும் மாவட்ட சம்பியன்களாகத் தெரிவு செய்யப்படுவதுடன், கொழும்பில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்குபற்ற இந்த அணிகளுக்கு வழியேற்படும்.

இந்தச் சுற்றுப் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதுடன், கொழும்பில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வரை முதலில் தம்புள்ளையில் போட்டி நடைபெறும். சிறந்த வீரர் (ஆண்), சிறந்த வீராங்கனை (பெண்) மற்றும் சிறந்த கோல் கீப்பர் போன்ற தனிப்பட்ட சிறப்பை வெளிப்படுத்தியவர்களுக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

அடுத்த தலைமுறையின் விளையாட்டுத் திறமைகளை ஆதரிப்பதில் சமபோஷவின் அர்ப்பணிப்பை CBL உணவுக் கொத்தணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலங்க டி சொய்சா வலியுறுத்தினார். இலங்கை பாடசாலைகளின் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் யூ.எஸ்.ஏ.பண்டார லீலரத்ன கருத்துத் தெரிவிக்கையில், 'இந்தப் போட்டியானது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நாடுமுழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் பங்குபற்றி போட்டியிடுவதற்கு வாய்ப்பை வழங்கும்' என்றார்.

கல்வி அமைச்சின் விளையாட்டு தொடர்பான பணிப்பாளர் உபாலி அமரதுங்க குறிப்பிடுகையில், 'உதைபந்தாட்ட வீர வீராங்கனைகள் முதல் தடவையாகப் போட்டியிடும் ஒரு சுற்றுப் போட்டியாக இது அமைந்திருப்பதால், இந்தப் போட்டிகளில் கிடைக்கும் அனுபவம் அவர்கள் மத்தியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

கடந்த சுற்றுப்போட்டியில் திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததுடன், யாழ்ப்பாணம் மகாஜன கல்லூரி அணி பெண்களுக்கான சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

CBL சமபோஷ என்பது CBL குழுமத்சதின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான Plenty Foods (Pvt) Limite இன் முதன்மை தயாரிப்பு வர்த்தக நாமமாகும். இது நாட்டின் முதல்தர காலை உணவு சீரியலுக்கான வர்த்தக நாமமாக விளங்குகிறது. சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு வீடுகளில் வளர்க்கப்பட்ட தரமான ஊட்டச்சத்துக்களை வழங்க உறுதிபூண்டுள்ளது.

Fri, 06/09/2023 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை