பரசரயர அரவநதனகக பரடடனன உயர வரத

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட யாழ். பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக கடமையாற்றிய பேராசிரியர் அரவிந்தன் குமாரசுவாமிக்கு,  பிரிட்டனில் Order of the British Empire என்னும் உயர் விருது கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் அச்சுவேலி வள்ளைப் பிரதேசத்தில் பிறந்த அரவிந்தன் குமாரசுவாமி, யாழ்.பல்கலைக்கழக பேராசிரியரான பின்னர், லண்டனில் பர்மிங்ஹெம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மற்றும் பர்மிங்ஹெம் வைத்தியசாலையின் பெண்ணோயியல், மகப்பேறு மருத்துவ விஞ்ஞானம் மற்றும் சத்திரசிகிச்சை தொடர்பான ஆலோசனையாளராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். பிரிட்டன் அரசரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டது.

பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி, பிரிட்டனில் பெண்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவி செய்வதற்காக மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் அவர் செய்த சேவையை பாராட்டி அரசரால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Order of the British Empire விருது 1917 ஆம் ஆண்டு ஐந்தாவது ஜோர்ஜ் மன்னரால் அமைக்கப்பட்ட யுத்தம் அல்லாத பின்னணியில், சேவை புரியும் நபர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்பட்டதாகும்.

 

Wed, 06/21/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை