வட கரய ரககட பகதத மடடத தன கரய

வட கொரியாவின் தோல்வி அடைந்த விண்வெளி ரொக்கெட்டின் மிகப் பெரிய பாகம் ஒன்றை கடலில் இருந்து வெற்றிகரமாக மீட்டதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.

கடந்த மே 31 ஆம் திகதி இராணுவ உளவு செய்மதி ஒன்றை விண்ணில் நிறுவுவதற்காக வட கொரியா அனுப்பிய ரொக்கெட் வெடித்து கடலில் விழுந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக வட கொரியா அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அந்த ரொக்கெட் பாகங்களை தேடும் முயற்சியில் தென் கொரியா தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (15) பின்னேரம் மஞ்சள் கடலில் இருந்து ரொக்கெட்டின் பிரதான உடல் பாகத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக தென் கொரியா கூறியது.

“மீட்கப்பட்ட பொருள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் போன்ற சிறப்பு நிறுவனங்களால் விரிவாக பகுப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூட்டுப் பணியாளர்களின் தலைவர் விடுத்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இயோசியோன் தீவின் தென் மேற்காக சுமார் 200 கிலோமீற்றருக்கு அப்பால் சுமார் 75 மீற்றர் (250 அடி) ஆழத்தில் கடல் படுகையில் இருந்து இந்த பாகம் எடுக்கப்பட்டது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“சொன்மா” என்ற பெயர் எழுதப்பட்ட வெள்ளை நிற பீப்பாய் போன்ற நீண்ட உலோகப் பொருள் ஒன்றை காட்டும் படங்களை தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

வட கொரியாவின் இந்த ரொக்கெட் வீச்சுக்கு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கண்டனம் வெளியிட்டிருந்தன. வட கொரியா பலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை சோதிப்பது ஐ.நா தீர்மானத்தை மீறுவதாக உள்ளது.

Sun, 06/18/2023 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை