உகரன ரஷயவகக ஆபரகக தலவரகள அமதப பயணம

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக ஏழு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் அந்த இரு நாடுகளுக்கும் அமைதிப் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா, எகிப்து, செனகல், கொங்கோ–பிராசவில்லே, சாம்பியா மற்றும் உகண்டா நாடுகளின் தூதுக்குழுவினர் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கியை நேற்று (16) சந்தித்ததோடு தொடர்ந்து இன்று (17) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளனர்.

எனினும் ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான உக்ரைன் பதில் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே இந்த தலைவர்களின் விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஆபிரிக்க தலைவர்கள் நேற்று உக்ரைன் தலைநகரை அடைந்த போதும் அந்த நகர் மற்றும் பிராந்தியத்தில் வான் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கறுங்கடலில் இருந்து உக்ரைன் வீசிய கலிப்ர் ஏவுகணைகள் கீவ் நகரை நோக்கி வந்ததை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரஷ்யா இந்த வாரத்தில் கீவ், ஒடிசே மற்றும் உக்ரைன் ஜனாதிபதியின் சொந்த ஊரான கிரிவி ரி மீது சரமாரி தாக்குதல்களை நடத்தியது. மறுபுறம் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் நடத்தும் பதில் தாக்குதல்கள் மாறுபட்ட முடிவுகளை வெளியிப்படுத்தி வருகின்றன.

ரஷ்ய படையிடம் இருந்து பல கிராமங்களை மீட்டதாக உக்ரைன் இராணுவம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

எனினும் இந்த மோதல் தீவிரம் கண்டிருப்பதோடு ரஷ்ய படையுடன் தமது துருப்புகள் கடும் சண்டையை எதிர்கொண்டிருப்பதாக உக்ரைன் பிரதி அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய போரில் பொரும்பாலான ஆபிரிக்க நாடுகள் நடுநிலை வகிப்பதோடு, ஆபிரிக்கப் பிராந்தியத்துடன் ரஷ்யா நல்லுறவை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sun, 06/18/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை