யழலரநத கலவர இரடடயரகள நட

566 KM தூரத்தை நடந்து சாதனைக்கு முயற்சி

மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்களான விக்கினேஷ்வரன் மற்றும் தயாபரன் எனும் இரட்டைச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையான 566 கிலோமீற்றர் தூரத்தை மூன்று

நாட்களில் நடந்து சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இந்த இரட்டையர்கள் நேற்று முன்தினம் (14) அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனைப் பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்தனர். இவ்விருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலிவரை 566 கிலோமீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து சாதனை படைக்கவுள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து காலிவரையான 566 கிலோமீற்றர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும் புத்தளத்திலிருந்து சீதுவை வரையான 147 கிலோமீற்றர் தூரத்தை வெறுமனே 6 மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பிலிருந்து பொகவந்தலாவை வரையான 184 கிலோமீற்றர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தனர்.

இந்த இரட்டையரில் தயாபரன் ஒரு நடனக் கலைஞர் என்பதும், அவர் தமிழகத்தின் பிரபல நடிகரான ராகவா லோரன்ஸிடம் நடனம் கற்றவர் என்பதும் அவர் முன்னதாக இலங்கையில் தொடர்ச்சியாக 10 நாட்கள் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் காலி முகத்திடலை அடைந்து தமது சாதனையை நிலைநாட்ட எதிர்பார்த்துள்ளனர்.

நாகர்கோவில் விசேட, வவுனியா விசேட நிருபர்கள்

Fri, 06/16/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை