ஜமஆ நளமயய கலபட பனவழ நகழவகள

 உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களும் பங்கேற்பு

 

பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தியை முன்னிட்டு பொன் விழா, பட்டமளிப்பு விழாக்கள் எதிர்வரும் (24) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளன. கலாபீடத்தின் தலைவர்  யாகூத் நளீம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் கௌரவ அதிதியாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கலந்து சிறப்பிப்பர்.

நிகழ்வில் விசேட உரையை நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் பண்டார, மு.கா தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரும் கலந்து கொள்வர்.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், உலமாக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரச உயரதிகாரிகள், கலாபீட விரிவுரையாளர்கள், உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அன்றைய தினம் பொன்விழா நிகழ்வுகள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் காலை 9.30 மணி முதல் நேரடி ஒலிபரப்பப்படவுள்ளது.

இலங்கை வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்த கொடைவள்ளல் மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியாரின் கனவாக 1973ஆம் ஆண்டு உதித்த இக்கலாபீடம், கடந்த 50 வருடங்களில் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தேவையான பல்வேறு புத்திஜீவிகளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அஜ்வாத் பாஸி)

Tue, 06/20/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை