இலங்கை கூரை தயாரிப்புக்களில் புரட்சியை ஏற்படுத்தும் Colorup Roof Tiles

கூரைகள் இல்லங்களுக்கு முக்கியமானவை. கூரைகள் உரிய தரத்தில் இல்லாவிட்டால், அவ்வீடு பாதுகாப்பற்றது. வாழ்வதற்கு உதவாது. ஆகையால், நாம் வாழும் வீட்டின் கூரைகள் உயர் தரத்தில் இருப்பதை நாம் உறுதிப்படுத்துவது முக்கியம் ஆகும். 

இலங்கையை பொறுத்தவரையில்,  கூரைத்தயாரிப்புகளை உயர் தரத்தில் பல ஆண்டுகாலமாக வழங்கும் Rhino Roofing, இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவையும் நம்பிக்கையையும் வென்றுள்ளது.

எப்போதும் புதுமையை நோக்கி பயணிக்கும் Rhino Roofing, கூரைத்தயாரிப்புக்களில் புதுப்புது உத்திகளை உபயோகித்து காலத்துக்கேற்றவாறு கூரைத்தயாரிப்புக்கள் துறையிலும் மக்கள் மனதிலும் தன்னை நிலைநிறுத்திவந்துள்ளது.

கூரைகள் எவ்வாறு முக்கியமோ, அவ்வாறே உட்கூரைகளும் வீடுகளுக்கு முக்கியமானவை. கூரைகளுக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு அரணாக இந்த உட்கூரைகள் செயல்படுகின்றன.   

அந்த வகையில், Rhino Roofing நிறுவனம், Colorup Roof Tiles உட்கூரைத் தயாரிப்புக்களை அண்மையில் இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதன்மூலம் இலங்கை கூரைத்தயாரிப்புக்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Colorup என்பது பல வண்ண சிமெண்ட் கூரைகள் மற்றும் உட்கூரைகளின் உற்பத்தி ஆகும்.

Colorup Roof Tiles ஆனது, மற்ற உட்கூரை தகடுகளை பயன்படுத்துவோர் அடிக்கடி எதிர்கொள்ளும் சவால்களை நிவிர்த்தி செய்யும். அத்தோடு, வீடுகளை மென்மேலும் அழகாக்கும்.  Colorup Roof Tiles ஆனது இலங்கை கட்டிடக்கலை நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டு BMICH இல் அண்மையில் நடைபெற்ற Architect 2023 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இக்கூரை தயாரிப்புக்கள் அழகியல் மற்றும் தொழிநுட்ப ரீதியில் மேம்பட்ட தரத்தினைக் கொண்டவை. 

இந்த தயாரிப்புகள், இத்தாலிய மற்றும் சுவிஸ் தொழில்நுட்பங்களைக் கொண்ட, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய, அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கூரைத்தயாரிப்புக்களின் அறிமுகம் தொடர்பில் Colorup இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி இந்திக்க ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் புரட்சிகரமான புதிய கூரைத் தயாரிப்பை சந்தைக்கு அறிமுகம் செய்தமை எமது மாபெரும் சாதனையாகும். எமது கூரை ஓடுகளின் தனித்துவமான 'S' வடிவமானது ஏராளமான நன்மைகளை வழங்குவதோடு, இவற்றை பொருத்தும்போது நுகர்வோர் மற்றும் கட்டடக்கலைஞர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை நிவர்த்தி செய்கிறது. சந்தையில் உள்ள மாற்று கூரை ஓடுகளுடன் ஒப்பிடும்போது இவை பாரம் குறைந்தவை. அதே நேரத்தில், மிகவும் வலுவானவை. அதுமட்டுமல்லாது, எந்த வானிலையையும் காலநிலையையும் தாங்கும் திறன் கொண்டவை. இது போலவே, நவீன கட்டிடக்கலைக்கு ஏற்ற உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை நுகர்வோருக்கும்  இலங்கையின் கட்டுமானத் துறைக்கும் தொடர்ந்து வழங்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்."

Colorup கூரை ஓடுகள் சூரிய ஒளி-எதிர்ப்புத்தன்மை கொண்ட பதியன்களைக் கொண்டுள்ளமையினால் அவை நீண்ட காலம் நீடித்திருக்கக்கூடியவையாக இருக்கின்றன. இவற்றின் நீர்ப்புகா மற்றும் நீரை உறிஞ்சா தன்மைகள் காரணமாக, அடை மழைக்காலங்களிலும் அதிகளவு நீரை தம்மிடையே தக்கவைத்துக்கொள்ளும். அத்தோடு மட்டுமல்லாது, இக்கூரைகளைக் கொள்வனவு செய்யும். வாடிக்கையாளருக்கு, கூரைகளின் வண்ணப் பூச்சுக்கு ஐந்து (5) ஆண்டு கால உத்தரவாதம் கிடைக்கின்றது.

இதனை பொருத்துவதும் இலகுவானது. இக்கூரைகளின் தனித்துவமான "S" வடிவம் இவற்றை இலகுவாகவும் இறுக்கமாகவும் இடைப்பூட்டு செய்வதற்கு உதவுகின்றது.  அத்தோடு, உட்கூரைவழியே உலவும் விலங்குகளின் செயல்பாடுகள் மற்றும் பலத்த காற்றின் காரணமாக எந்தவிதத்திலும் சேதப்படுத்தப்பட மாட்டாது. அதே நேரத்தில் கசிவுகளையும் தடுக்கிறது. அத்தோடு, தீப்பரவலையும் தடுக்கும் ஆற்றலை Colorup கூரை ஓடுகள் கொண்டுள்ளன. இவற்றின் குறைந்த எடை மற்றும் அதிக வலிமை ஆகியவை அதிசிறந்த பாதுகாப்பை வாடிக்கையாளருக்கு உறுதிசெய்கிறது. இக்கூரைத்தகடுகளைப் பொருத்துவதற்கு மரச்சட்டங்கள் தேவைப்பட மாட்டாது. இதனால், கூரை பொருத்துவதற்கான செலவுகளை இவை மேலும் குறைக்கின்றன. ஒவ்வொரு பொதியும் எளிதில் கையாளக்கூடிய 5 கூரை தகடுகளைக் கொண்டவை . ஆகையால், இவற்றை எவ்வித சேதமுமின்றி எங்கும் கொண்டுசெல்லவும், களஞ்சியப்படுத்தி வைக்கவும் முடியும். 

Colorup கூரை ஓடுகள் இந்நிறுவனத்தின் மிக சமீபத்திய தயாரிப்பாக அமைகின்றது. இதற்கு முன்னர், Rhino Roofings Colorup தகடுகளை (corrugated sheets) 2007 ஆம் ஆண்டில் தயாரிக்கத் தொடங்கியது. மேலும் இந்நிறுவனம் மர பட்டைகளின் நிறத்திலான உட்கூரைப்பட்டைகளை 2020 இல் சந்தைக்கு அறிமுகம் செய்துவைத்தது. Colorup இன் இந்த உட்கூரைப்பட்டைகளானது சிறந்த தரத்திலான மர வகையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் நுகர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.  Colorup தயாராப்புக்களானவை கூரைகளுக்குப் பயன்படுத்தும் போது தீ மற்றும் கரையான்கள் தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பை வழங்குகின்றது. அத்தோடு, சுற்றுச்சூழலுக்கு   குறைந்தளவு எதிர்மறைத் தாக்கத்தையே ஏற்படுத்தும். 

மேற்குறிப்பிட்ட சிறப்புத்தன்மைகளின் விளைவாக Colorup உட்கூரைப்பட்டைகள்  இலங்கை கட்டிடக்கலை நிறுவனத்தினால் வழங்கப்பட்ட,  2021 ஆம் ஆண்டுக்கான கட்டடக்கலை தயாரிப்புகளுக்கான விருதை வென்றெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது. Colorup கூரை ஓடுகளைப் பயன்படுத்த ஆர்வமுள்ள நுகர்வோர் மற்றும் கட்டுநர்கள் www.rhinocolorup.com இல் அல்லது 011 5 748 738 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற முடியும்.

Mon, 05/08/2023 - 13:54


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை