கொழும்பின் புறநகர் பகுதிகளில் 10 மணி நேர நீர் வெட்டு

Rizwan Segu Mohideen

இன்று (08) முற்பகல் 10.00 மணி முதல் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொலன்னாவ நகரசபை பகுதி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எத்துல்கோட்டே, நாவல, கொஸ்வத்தை, இராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த கிளை வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தினால் (LECO) மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொலன்னாவை நீர் சேகரிப்பு நிலையத்தில் மின்சார விநியோகம் தடைப்படுவதான் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படுமென சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று (08) மு.ப. 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதால், பாவனையாளர்கள் தங்களுக்கு அவசியமான நீரை சேகரித்து பயன்படுத்துமாறும், இதன் காரணமாக ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Mon, 05/08/2023 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை