ஜப்பானில் நால்வர் கொலை: சந்தேகத்தில் ஆடவர் கைது

ஜப்பானில் மிக அரிதான கத்திக் குத்து தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அந்தத் தாக்குதல்தாரி நகானோ மாகாணத்தில் ஒரு பெண் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தி இருப்பதோடு வேட்டை துப்பாக்கி ஒன்றால் இரு பொலிஸார் சுட்டுள்ளார். நான்காவது நபர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசியல்வாதியின் மகனான 31 வயது மசனோரி அவுகி என்பவரே சந்தேக நகர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜுலையில் முன்னாள் ஜனாதிபதி ஷின்சோ அபே கொல்லப்பட்டபோதும், ஜப்பானில் துப்பாக்கி வன்முறை மிக அரிதான ஒன்றாகும். ஆடவர் ஒருவர் பெண் ஒருவரை துரத்திச் சென்று கத்தியால் குத்தியதாக உள்ளூர் நேரப்படி கடந்த வியாழன் இரவு பொலிஸாருக்கு ஆரம்பத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. ஏன் அந்தப் பெண்ணை கொன்றாய் என்று அங்கிருந்த ஒருவர் கேட்டதற்கு, “கொல்ல வேண்டும் என்பதால் கொன்றேன்” என்று தாக்குதல்தாரி பதிலளித்திருப்பதாக சம்பவத்தை பார்த்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் மீதும் அந்தத் தாக்குதல்தாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். கொல்லப்பட்ட நான்காவது நபர் வயதான பெண் என்று குறிப்பிடப்பட்டபோதும் அவர் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை.

ஜப்பானில் துப்பாக்கி வைத்திருப்பவர் கண்டிப்பான சோதனை மற்றும் மனநல சோதனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 05/27/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை