பீப்பள்ஸ் லீசிங் வர்த்தக நாம தூதுவர்களாக தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ்

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனரான பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, நாட்டின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களான தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரை தனது வர்த்தக நாம தூதுவர்களாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கையானது நாட்டில் நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்துவதையும் அதன் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி பலரது பார்வையினை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனஞ்சய டி சில்வா ஒரு திறமையான பல்துறை ஆட்டக்காரர் ஆவார், அவர் தற்போது இலங்கை தேசிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உப தலைவராக பணியாற்றி வருகிறார.; தனது அபாரத் திறமையானா துடுப்பாட்டம் மற்றும் துல்லியமான சுழல் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற அவர், சமீபத்திய ஆண்டுகளில் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார். மறுபுறம், கமிந்து மெண்டிஸ், ஒரே ஓவரில் வலது மற்றும் இடது கையினால் பந்துகளை வீசும் தனது தனித்துவமான திறமையால் தனக்கென ஒரு பெயரைத் தக்கவைத்த ஒரு  பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.

இலங்கையின் கிரிக்கெட் சமூகத்தில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படும் இரு துடுப்பாட்ட வீரர்களுக்கும்  பீப்பள்ஸ்; லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் உடனான கூட்டாண்மையானது ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமைந்துள்ளது. வர்த்தக நாம தூதுவர்கள் என்ற வகையில் நிறுவனத்தின் சிறப்பம்சங்கள், ஒருமைப்பாடு மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் மற்றும் விளம்பர நடவடிக்கைகளில் இவர்கள் அங்கம் பெறுவார்கள்.

பீப்பள்ஸ்; லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் திரு.பிரதீப் அமிர்தநாயகம் அவர்கள்  கூட்டாண்மை குறித்த தனது உரையில் “தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் எமது வர்த்தக நாம தூதுவர்களாக இருப்பதில் நாங்கள் வியப்படைந்துள்ளோம். இரண்டு கிரிக்கெட் வீரர்களும் இலங்கை கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதோடு, ஒரு நிறுவனமாக எமது மதிப்புகளையும் பிரதிபலிக்கின்றனர். இந்த கூட்டாண்மையானது  நாட்டில் நம்பகமான நிதிச் சேவை வழங்குநராக எங்கள் நிலையை வலுப்படுத்துவதுடன் எங்களை எமது  வாடிக்கையாளர்களுடன் ஓர் உயர்ந்த அர்த்தமுள்ள வகையில் பிணைக்கும் என்றும் நாம் நம்புகிறோம்.” என கருத்து தெரிவித்தார்.

பீப்பள்ஸ்; லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ஷமிந்திர மார்செலைன், தலைவரின் உணர்வுகளை எதிரொலித்ததோடு, “தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் எமது சிறப்பான நிறுவன மதிப்புகளையும், புத்தாக்கம் மற்றும் நேர்மையை பிரதிபலிக்கும் விதிவிலக்கான வீரர்கள்”; எனவும் “வர்த்தக நாம தூதுவர்களாக அவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு, மேலும் அவர்களின் புகழ் மற்றும் செல்வாக்கு பலரது பார்வையை ஈர்ப்பதற்கும் வலுவான வர்த்தக நிலைப்பாட்டை உருவாக்குவதற்கும் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்." எனவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர், “பீப்பள்ஸ்; லீசிங் அன்ட் ஃபைனான்ஸ பிஎல்சியின் வர்த்தக நாம தூதுவர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள்  பெருமையடைகிறோம். அத்தோடு சிறப்பான புத்தாக்கத்திற்கான நிறுவன உறுதிப்பாட்டிற்கு பங்களிப்பதோடு மேலும் அவர்களின் சேவைகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை மக்களின் வணிகங்களை வலுவூட்டும் அவர்களின் பணிக்கு ஆதரவளிப்பதற்கும் ஒன்றாக இணைந்து செயல்பட நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" எனவும் தெரிவித்தனர்.

பீப்பள்ஸ்; லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் மற்றும் இந்த இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கிடையிலான கூட்டமைப்பானது இலங்கையின் கிரிக்கெட் சமூகத்திலும் அதற்கு அப்பாலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அவர்களின் ஆதரவுடன், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் நம்பகமான நிதி தீர்வுகளை தொடர்ந்து வழங்கி இலங்கையின் வளர்ச்சியிலும்  பொருளாதார அபிவிருத்தியிலும் பங்கேற்கும்.

பீப்பள்ஸ்; லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமுமாகும். 1996 இல் செயற்பாடுகளை ஆரம்பித்த பீப்பள்ஸ்; லீசிங்  கம்பெனியானது 2011 இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ்; லீசிங் ஆனது, பங்களாதேஷ் நாட்டில்; ஒரு வெளிநாட்டு முயற்சி உட்பட, தனது நிபுணத்துவத்துடன் தொடர்புடைய ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாகவும் வளர்ந்துள்ளது. 

Fri, 05/26/2023 - 11:54


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை