சுவீடன் கடலில் தோன்றிய ரஷ்ய உளவு திமிங்கிலம்

ரஷ்யாவால் உளவு பார்க்க பயிற்சி அளிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சேணம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் சுவீடன் கடற்கரைக்கு அப்பால் மீண்டும் தோன்றியுள்ளது.

இந்த திமிங்கிலம் நோர்வே நாட்டில் தோன்றி அங்கு எச்சரிக்கை அதிகரிக்கபட்ட நிலையில் உளவு பார்க்கும் சாத்தியம் கொண்ட இந்தத் திமிங்கிலத்தை தவிர்க்கும்படி மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

இந்தத் திமிங்கிலம் தனது உடலில் உளவு பார்க்கும் கருவிகளை பொருத்திய நிலையில் 2019 ஆம் ஆண்டே முதல் முறை நோர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் திமிங்கிலம் சந்தேகத்திற்கு இடமின்றி பயிற்சி அளிக்கப்பட்ட ஒன்று என்று கடல்சார் உயிரியலாளர்கள் முன்னதாக குறிப்பிட்டிருந்தனர். தனது இயற்கை சூழலில் இருந்து விலகி அசாதாரண வேகத்தில் செல்லும் இந்தத் திமிங்கிலம் குறித்த சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.

Wed, 05/31/2023 - 14:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை