பெற்றோல் 92 ரூ.318; பெற்றோல் 95 ரூ.385; டீசல் ரூ.310; சுப்பர் டீசல் ரூ.330; மண்ணெய் ரூ. 245

Rizwan Segu Mohideen

- பெற்றோல் 92, மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

குறித்த விலைக் குறைப்புக்கு அமைய, 

 • பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 333 இலிருந்து ரூ. 15 இனால் குறைப்பு
 • பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 365 இலிருந்து ரூ. 20 இனால் அதிகரிப்பு
 • சுப்பர் டீசல்: ரூ. 330 இலிருந்து ரூ. 10 இனால் அதிகரிப்பு
 • மண்ணெண்ணெய்: ரூ. 295 இலிருந்து ரூ. 50 இனால் குறைப்பு
 • தொழிற்துறை மண்ணெண்ணெய்: ரூ. 330 இலிருந்து ரூ. 60 இனால் குறைப்பு
 • ஒட்டோ டீசல்: ரூ. 310 (விலை மாற்றமில்லை)

அந்த வகையில் புதிய எரிபொருட்களின் புதிய விலைகள்,

 • பெற்றோல் ஒக்டேன் 92: ரூ.318
 • பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 385
 • சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) - ரூ.340
 • மண்ணெண்ணெய் : ரூ.245
 • தொழிற்துறை மண்ணெண்ணெய்: ரூ. 270
 • ஒட்டோ டீசல்: ரூ.310

LIOC நிறுவனமும் குறித்த விலைத் திருத்தத்தை அமுல்படுத்துவதாக வழக்கம் போன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மே 01 முதல் பெற்றோல் 92 ரூ.333; பெற்றோல் 95 ரூ.365; டீசல் ரூ.310; சுப்பர் டீசல் ரூ.330; மண்ணெய் ரூ. 295 ஆக விலை திருத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 30 முதல் பெற்றோல் 92 ரூ.340; பெற்றோல் 95 ரூ.375; டீசல் ரூ.325; சுப்பர் டீசல் ரூ.465; மண்ணெய் ரூ. 295 ஆக விலை திருத்தப்பட்டது.

கடந்த மார்ச் 02 முதல் மண்ணெண்ணெய் ரூ. 50 இனால் குறைக்கப்பட்டிருதது.

கடந்த பெப்ரவரி 02 முதல் பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 30 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்பு கடந்த ஜனவரி 03 முதல் டீசல் ரூ. 15 இனாலும்; மண்ணெண்ணெய் ரூ. 10 இனாலும் குறைக்கட்பட்டிருந்தது.

Wed, 05/31/2023 - 21:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை