A/L விடைத்தாள் திருத்தும் இழுபறிகளுக்கு சுமுக முடிவு

- ஆசிரியர், விரிவுரையாளர்களுடனான பேச்சுவார்த்தைகளில் இணக்கம்
- O/L பரீட்சையை உரிய நேரத்தில் நடத்த நடவடிக்கை

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளை விரைவாக முடித்துக்கொண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையை உரிய வகையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், அந்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் அதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கு உச்ச அளவு கொடுப்பனவை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இரண்டொரு தினங்களில் அவர்கள் அதற்கான முடிவை அறிவிப்பர் என்றும் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜயந்த சமரவீர எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்.

பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இம்முறை அதிகரித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து மேலதிகமாக 425 மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

(04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இதன்படி 4,743 ரூபாவாகவிருந்த 12.5 கிலோ சிலிண்டரின் விலை 3738 ரூபாவாகவும் 1,904 ரூபாவாகவிருந்த 5 கிலோ சிலிண்டரின் விலை 1,502 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

2.3 கிலோ சிலிண்டர் 883 ரூபாவிலிருந்து 700 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

அதேவேளை நேற்று (04) நள்ளிரவு முதல் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைக்கப்படவுள்ளதாகவும் லாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1,290 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதால்,புதிய விலை 3,990 ரூபாவாகியுள்ளது.

05 கிலோ நிறையுடைய எரிவாயு சிலிண்டர் விலை 516 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.இதன் புதிய விலை 1,596 ரூபாவாகியுள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவிலைகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்ததன் காரணமாகவே மக்களுக்கு அதிக பட்ச பயனை வழங்க முடிந்துள்ளது.

அத்தோடு டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றமையும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்தமை, ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தமை மற்றும் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட விலைச் சூத்திரம் என்பவற்றின் அடிப்படையில் வரலாற்றிலேயே பாரியளவிலான விலை குறைப்புக்கள் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் எரிவாயு விலைகளை இதே மட்டத்தில் அல்லது இதனை விடக் குறைவான மட்டத்தில் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டு அண்மித்துள்ள இந்தக் காலப்பகுதியில் இவ்வாறு பாரியளவிலான சலுகையை மக்களுக்கு வழங்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

லிட்ரோ நிறுவனம் நஷ்டமடைந்து இந்த விலை குறைப்புக்களை நடைமுறைப்படுத்தவில்லை. நான் இருக்கும் வரை இந்நிறுவனம் ஒருபோதும் நஷ்டமடையாதென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் லிட்ரோ நிறுவனம் நியாயமான சிறிய இலாபத்துடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதே வேளை, மறுபுறம் நிறுவனத்தின் இலாபத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலேயே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

அடுத்த விலை திருத்தத்தின் போது விலைகளில் மாற்றங்களில் எவ்வாறிருக்கும் என்பதை இப்போதே ஊகிக்க முடியாது. எனினும், விலைகளை இதே மட்டத்தில் பேணுவதற்கு அல்லது இதனை விட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் செயற்படுகிறோம். ரூபாவின் பெறுமதி உயர்வடைவதன் அடிப்படையில் மேலும் விலை குறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.

2024 வரையான எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இனியொரு போதும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது. விலை குறைப்பின் அடிப்படையில் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப முற்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Wed, 04/05/2023 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை