Adrian Zecha உடனான கூட்டமைப்பை ஏற்படுத்திய Hunas Holdings PLC நிறுவனம்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் Hunas Falls Hotel இன் தாய் நிறுவனமான Hunas Holdings PLC நிறுவனமானது ‘Hotelier of the Century' என அறியப்படும் Adrian Zecha இனால் நிர்வகிக்கப்படும் Azotels நிறுவனத்துடன் முக்கிய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

இந்த கூட்டாண்மை மூலம் Azotels நிறுவனமானது தற்போதைய Hunas Falls Hotel இனை வில்லாக்களுடன் கூடிய உயர்தர சொகுசு ஹோட்டலாக மேம்படுத்துவதோடு இந்த ஸ்தாபனத்தின் நிர்வாகத்தையும் கையாண்டு, உலகின் சிறந்த ஹோட்டல்களின் வரிசையில் இடம்பிடிப்பதை உறுதி செய்யும்.

Hunas Falls Hotels PLC என முன்னர் அறியப்பட்ட Hunas Holdings PLC நிறுவனமானது விருந்தோம்பல், சுற்றுலா, ஆதனத்துறை, புதுப்பிக்கத்தக்க சக்தி, மற்றும் தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள், தேயிலை தரகு ஆகியவை உள்ளடங்கிய ஐந்துறைகளில் முன்னிலை வகிக்கும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமாகும். Hunas Holdings PLC நிறுவனமானது, நிலைத்தன்மையின் மீது தனது கவனத்தை செலுத்தி தொடர்ந்தும் முன்னேறி வருகிறது.

Hunas Holdings PLC நிறுவனத்தின் தலைவர் தனுக சமரசிங்க, இந்த பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் பற்றி பேசுகையில், "50 ஆண்டுகால நினைவுகளை கொண்டாடும் Hunas Falls Hotelக்கு இந்த கூட்டாண்மை ஒரு முக்கியமான மைல்கல்லாகும். Hunas Falls Hotel இலங்கையின் மிகவும் அழகான சொத்து என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். இதனடிப்படையில், விருந்தோம்பல் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், தொழில்துறையில் எப்போதும் அதிகரித்து வரும் ஆர்வத்துடன் செயல்படும் ஸெக்காவுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெருமையான விடயம் என நான் கருதுகிறேன்" என்றார்.

விருந்தோம்பல் துறையில் 5 தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், Forbes இதழில் நூற்றாண்டின் ஹோட்டலியர் (Hotelier of the Century) என்ற நன்மதிப்பு மிக்க அங்கீகாரத்தையும் பல பாராட்டுகள் மற்றும் தனித்துவமான வாழ்நாள் சாதனைகளையும் பெற்றுள்ள ஏட்ரியன் ஸெக்கா, விருந்தோம்பல் துறையில் ஒரு மூத்த முன்னோடி ஆகும். சொகுசு பூட்டிக் வில்லா கருத்தாக்கத்தின் முன்னோடியான இவர், இயற்கை அழகு, கட்டடக்கலை பாரம்பரியம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை சிரமமின்றி தனது தனித்துவமான பாணியில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஹோட்டல்களின் மூலம் இணைக்கிறது.

Tue, 04/04/2023 - 11:06


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை