அமெரிக்க வான் தாக்குதலில் ஈரானிய ஆதரவாளர்கள் பலி

கிழக்கு சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்களில் ஈரான் ஆதரவு போராளிகள் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் அமெரிக்க ஒப்பந்ததாரர் ஒருவர் கொல்லப்பட்டு ஐந்து அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததை அடுத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு சிரியாவில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையுடன் தொடர்புபட்ட குழு ஒன்றினால் பயன்படுத்தப்படும் தளம் ஒன்றின் மீது துல்லியமான விமானத் தாக்குதல் நடத்த ஜனாதிபதி ஜோ பைடனின் வழிகாட்டலில் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புரட்சிப் படை ஈரான் இராணுவத்தில் ஓர் அங்கம் என்பதோடு அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ளது.

ஈரான் புரட்சிப் படையுடன் தொடர்புபட்ட குழுக்களால் சிரியாவில் கூட்டுப்படைக்கு எதிராக அண்மையில் நடத்தப்பட்ட தீவிர தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒஸ்டிக் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சியுள்ள இஸ்லாமிய அரசுக்கு குழுவுடன் போராடுவதற்காக நூற்றுக்கணக்கான அமெரிக்க துருப்புகள் தொடர்ந்தும் சிரியாவில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 03/25/2023 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை