7 அத்தியாவசிய பொருட்களை குறைத்துள்ள சதொச

Rizwan Segu Mohideen

- இன்று முதல் நாடு முழுவதும் அமுல்

லங்கா சதொச நிறுவனம் 7 பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த விலை குறைப்பு இன்று (09) முதல் அமுலுக்கு வருவதாகவும், அப்பொருட்களை நாடு முழுவதிலுமுள்ள சதொச விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய முடியுமெனவும் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் பிரதானி சவன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய:

  • செத்தல் மிளகாய் ரூ.75 குறைப்பு: ரூ.1500
  • பருப்பு ரூ.19 குறைப்பு: ரூ.339
  • கோதுமை மா ரூ.15 குறைப்பு: ரூ.230
  • வெள்ளைச் சீனி ரூ.11 குறைப்பு: ரூ.218
  • சிவப்பு பச்சை அரிசி ரூ.9 குறைப்பு: ரூ.155
  • வெள்ளை நாட்டு அரிசி: ரூ.7 குறைப்பு: ரூ.188
  • பெரிய வெங்காயம் ரூ.6 குறைப்பு: ரூ.129

Thu, 03/09/2023 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை