எயிட்ஸ் நோயில் இருந்து மேலுமொருவர் குணமடைவு

எயிட்ஸ் நோயில் இருந்து உலகின் மூன்றாவது நபர் ஒருவர் குணமடைந்துள்ளார். இரத்தப் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றபோதே அந்த ஜெர்மன் நாட்டவர் எயிட்ஸ் நோயில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

53 வயதான அந்த ஆடவருக்கு எச்.ஐ.வி தொற்றி இருப்பதாக 2008ஆம் ஆண்டு உறுதிசெய்யப்பட்டது. அவருக்குப் பின்னர் இரத்தப் புற்றுநோய் இருப்பதாக 2011ஆம் ஆண்டில் உறுதியானது.

2013ஆம் ஆண்டில் அவருக்கு மூல உயிரணு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூல உயிரணுக்களில் உருமாற்றம் பெற்றிருந்த ஒர் அரிய மரபணு இருந்தது. அது அந்த ஆடவரின் உடலில் எச்.ஐ.வி வைரஸ் பாதிப்பை நிறுத்த உதவியதாக நேச்சர் மெடிசின் எனும் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டது. இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆடவரிடம் எயிட்ஸ் நோய் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

முன்னதாக இதேபோன்ற மூல உயிரணு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெர்லின் மற்றும் லண்டனைச் சேர்ந்த மேலும் இருவர் இவ்வாறு எயிட்ஸ் நோயில் இருந்து முழுமையாக குணம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 02/23/2023 - 11:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை