அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 5% இனை குறைக்க நடவடிக்கை

Rizwan Segu Mohideen

- திறைசேரிக்கு போதிய வருமானம் இல்லை

வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும் 5% இனை குறைக்க நேரிடுமென, அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்றையதினம் (10) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன் இதனைத் தெரிவித்தார்.

மாத இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகிய முன்னுரிமை செலவுகளை வழங்கிய பின்னர் காணப்படும் அத்தியாவசிய விடயங்களை மேற்கொள்வதற்கு அவசியமான வருமானம் இல்லாமை காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வருடம் முழுவதும் இவ்வருமான பிரச்சினை காணப்படுவதால், குறித்த விடயத்தை ஜனாதிபதி முன்வைத்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

எதிர்பார்த்ததை விட மிக மோசமான நிதிப் பிரச்சினைக்கு திறைசேரி முகம் கொடுத்துள்ளதாக, ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2022 இல் பொருளாதாரம் மிகப் பாரிய அளவில் சிக்கலடைந்தமை காரணமாக, 2023ஆம் வருடத்தின் முதல் பகுதியில் வரி மூலம் பெறும் வருமானம் குறைவடைந்துள்ளமை இதற்கான பிரதான காரணமாகுமென அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய முதல் காலாண்டில் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைவடைந்த போதிலும், அரசாங்கத்தினால் ஏற்க வேண்டிய செலவுகளை, குறிப்பாக அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு, அரச கடன்களுக்கான வட்டி உள்ளிட்ட ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவற்றுக்கான நிதியை வழங்குவதற்கான வருமான திறைசேரிக்கு இல்லையென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும் 5% இனை குறைக்க நேரிடுமென, அமைச்சரவைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மாத இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகிய முன்னுரிமை செலவுகளை வழங்கிய பின்னர் காணப்படும் அத்தியாவசிய விடயங்களை மேற்கொள்வதற்கு அவசியமான வருமானம் இல்லாமை காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Tue, 01/10/2023 - 10:54

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை