பாகிஸ்தானில் 2022இல் 376 தாக்குதல் சம்பவம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களில் கடந்த ஆண்டில் 376 பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்களில் பெரும்பாலானவை பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ள தெஹ்ரீக் -இ- தலிபான், இஸ்லாமிய ஸ்டேட் ஒப் குராசான், பலுசிஸ்தான் விடுதலை படை ஆகிய அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடந்த வருடம் அதிகரித்துக் காணப்பட்டமை குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுக்கூட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Tue, 01/10/2023 - 13:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை