உக்ரைன் நகரங்களில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைனிய போர் ஆரம்பித்தது தொடக்கம் அந்நாட்டின் மீது இடம்பெற்ற பாரிய தாக்குதலாக பல நகரங்களின் மீதும் ரஷ்யா நேற்று சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தலைநகர் கீவ்வில் இடம்பெற்ற வெடிப்புகளை அடுத்து 14 வயது சிறுமி உட்பட குறைந்தது மூவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாக மேயர் விடாலி கிளிச்கோ தெரிவித்துள்ளார்.

கார்கிவ், ஒடெசே, லிவிவ் மற்றும் சிடோமிர் நகரங்களிலும் வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. 69 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அதில் 54 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. ஐந்து மணி நேரம் வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெற்கு மாகாணமான ஒடெசே பிராந்தியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீது பாரிய ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அவர் விபரித்தார்.

கடல் மற்றும் வான் மார்க்கமாக பல்வேறு திசைகளில் இருந்து ரஷ்ய தாக்குதல்கள் வந்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இதன்போது கணிசமான ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக அது தெரிவித்தது.

Fri, 12/30/2022 - 09:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை