சீனாவுடன் நியூசிலாந்து வர்த்தகத் திட்டம்

பசுபிக் பிராந்தியத்தில் சீனா அதிக உறுதி நிலையை அடைந்துள்ளது என்று நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு விஜயம் செய்யவிருப்பதற்கான தமது நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், அடுத்தாண்டு தொடக்கத்தில் வர்த்தக தூதுக்குழுவொன்றின் பயணத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் கலந்துரையாடியுள்ளார். அத்திட்டத்தை சீன ஜனாதிபதி வரவேற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அவுஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் ஆகிய ஊடகங்களுடனான கூட்டு நேர்காணலின் போது இவ்வாறு கூறிய அவர், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் தலைமையில் சமீபத்திய ஆண்டுகளில் சீனா பெரிதும் முன்னேற்றமடைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

Thu, 12/29/2022 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை