கடும் பனிப்பொழிவினால் 250 மில்லியன் பேர் பாதிப்பு

வட அமெரிக்காவை கடுமையான பனிப்புயல் தாக்கி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் மின்சாரம் இன்றி கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வளிமண்டத்தில் அழுத்தம் குறையும்போது ஏற்படும் இந்தப் பனிப்புயல் சூழலால், பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் உறையவைக்கும் குளிர் உருவாகியுள்ளது. இதனால் குவெபெக் தொடக்கம் டெக்சாஸ் வரை 2,000 மைல்கள் வரையான பகுதியில் பனிப்புயல் தாக்கில் இருப்பதோடு இதனால் சுமார் 250 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு அமெரிக்க மாநிலமான மொன்டானா மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதோடு அங்கு வெப்பநிலை மைனஸ் 50 பாகை அளவுக்கு குறைந்துள்ளது.

கனடாவில் ஆண்டேரியோ மற்றும் க்விபெக் மாகாணங்களில் ஆர்க்டிக் பனிப்பொழிவின் விளைவாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதில் பனிப்புயலுடன் தொடர்புபட்ட வீதி விபத்துகளிலேயே பலரும் உயிரிழந்துள்ளனர். ஒஹியோவில் 50 கார்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் நால்வர் கொல்லப்பட்டனர். அந்த மாநிலத்தில் ஏற்பட்ட வேறு விபத்துகளில் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

Mon, 12/26/2022 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை