ரஷ்யாவுடன் பலசுற்று பேச்சுவார்த்தை முன்னெடுப்பு

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தகவல்

சலுகை விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ரஷ்யாவுடன் பல சுற்றுப்பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீதி வரையறைக்கு உட்பட்டு ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இலங்கை நேரடியாக பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் அலி சப்ரி, அது மாத்திரமின்றி, நிலக்கரி, தானியவகைகள், மற்றும் உரம் ஆகியனவற்றை இறக்குமதி செய்வதிலும் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையிலான யுத்தத்திற்கு தீர்வு காணப்படுவது அவசியமாகும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

Sat, 11/26/2022 - 07:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை