அல்ஜீரியாவில் 49 பேருக்கு மரண தண்டனை உத்தரவு

அல்ஜீரியாவில் காட்டுத் தீயை ஆரம்பித்தவர் என்ற சந்தேகத்தில் ஆடவர் ஒருவரை அடித்துக் கொன்ற 49 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

அல்ஜீரியாவில் மரண தண்டனைக்கு தடை உள்ள நிலையில் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அல்ஜீரியாவில் 2021இல் வரலாறு காணாத காட்டுத் தீ சம்பவங்கள் பதிவானதோடு இதில் 90 பேர் வரை கொல்லப்பட்டனர். இதில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவச் சென்றபோதே ட்ஜாமல் பென் இஸ்மைல் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் கோபத்தைத் தூண்டியது.

கடும் வெப்பம் மற்றும் உலர்ந்த சூழலே காட்டுத் தீ ஏற்படக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டபோதும் குற்றவாளிகளும் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 28 பேருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

Sat, 11/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை