ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை மீதான தீர்மானத்தின் நகல்வடிவம் அவசியமற்ற ஒன்று

இலங்கை கடுமையாக எதிர்க்கும் --−அலிசப்ரி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் நகல்வடிவம் அவசியமற்றது என்பதுடன் பிளவுபடுத்தும் தன்மையை கொண்டதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இதனை எதிர்க்குமெனவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார். இத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலும் இலங்கை அதனை எதிர்க்குமென அமைச்சர் அலி சப்ரி மோர்னிங் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். 

நகல்வடிவ தீர்மானம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், இந்த தருணத்தில் இது தேவையற்ற விடயமென நாங்கள் அவர்களுக்கு தெளிவாக தெரிவித்துள்ளோமென்றும் குறிப்பிட்டுள்ளார். 

நாங்கள் பிளவுபடுத்தும் எந்த பொறிமுறையையும் இந்த தருணத்தில் விரும்பவில்லை. எங்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவே அவசியமென அவர் தெரிவித்துள்ளார். 

தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இலங்கையரென்ற அடிப்படையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உள்நாட்டு பொறிமுறை மூலம் உருவாக்குவது எங்களது கடமையாகும். இது தொடருமென தெரிவித்துள்ள அலிசப்ரி, அதற்கு அப்பால்பட்ட எதுவும் எந்த சர்வதேச பொறிமுறையும் எங்கள் அரசமைப்பை மீறும் வகையில் அமைந்திருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளார். 

போதிய ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த தீர்மானத்தை எதிர்ப்போம். ஏனென்றால் எங்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 09/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை