இறக்குமதி செய்யப்படும் அரிசி குறித்து திரிபுபடுத்தி பிரசாரம்

சபையில் அமைச்சர் மஹிந்த அமரவீர விளக்கம்

 

 இறக்குமதி செய்யப்படும் அரிசியைவிட எமது நாட்டு அரிசி, தரத்தில் கூடியதாகும். அவ்வாறு இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இற்க்குமதி செய்யப்படும் அரிசி பாவனைக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்படும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவையாகுமென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் மயன்த திஸாநாயக்க விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில்,

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து நாட்டுக்கு சுமார் 15 மெட்ரிக் தொன் அரிசி கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி மக்களுக்கு பயன்படுத்த உகந்ததல்ல என சமூக வலைத்தளங்களில் பிரசாரமாகி வருகின்றது. அத்துடன் இந்த அரிசி தற்போது சந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதனால் இதன் உண்மைத்தன்மை தொடர்பில் அமைச்சர் தெளிவுபடுத்தவேண்டும் என கேட்டுக்கொணடார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டிருந்த அரிசி தட்டுப்பாடு காரணமாகவே வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தோம். இறக்குமதி செய்யப்படும் அரிசி அந்த நாடுகளில் பாவிக்கப்படுவதாகும்.

என்றாலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அரிசியைவிட எமது நாட்டில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் அரிசி தரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கின்றது என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம். ஏனெனில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் உரம் தரம் மிக்கதாகும். நாங்கள் மனித உடலுக்கு ஆரோக்கியமற்ற பல கிருமினாசினிகளை தடைசெய்திருக்கின்றோம். எமது வயல் நிலங்களில் அதிகமாக இரசாயன உரத்தைவிட சேதன பசளையே பயன்படுத்தப்படுகின்றது. அதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியைவிட எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி பாவனைக்கு மிகவும் உகந்தது.

அந்த நாடுகளில் மக்கள் இந்த அரிசியை அவர்களின் உணவுக்காக எடுத்துக்கொள்கின்றனர். நாங்கள் தெரிவித்த கருத்தை சரியாக விளங்கிக்கொள்ளாமலேயே ஊடகங்களிலும் சமூக வலைத்தலங்களிலும் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொடர்பில் திரிபுபடுத்தி பிரசாரம் செய்யப்படுகிறது என்றார்.

Thu, 09/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை