டெங்கு நோயாளர் தொகையில் அதிகரிப்பு

25 சிறுவர்களும் நோயினால் பாதிப்பு

நாட்டில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்

டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 25 சிறுவர்கள் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர்களில் 07 பேரின் நிலை மோசமாக காணப்படுவதாகவும் சிறுவர் நோய் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு முடிந்தளவு நீராகாரம் வழங்குமாறும் அவர்களுக்கு போதுமான ஓய்வைப் பெற்றுக்கொடுக்குமாறும் அத்துடன் பரசிட்டமோல் மாத்திரைகளை அவர்களுக்கு வழங்குவது அவசியமென்றும் அவர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதேவேளை லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 11 சிறுவர்கள் சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர்களில் 9 பேர் சாதாரண வார்ட்டுகளிலும் மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 08/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை