கிழக்கு சீனாவில் 35 பேரிடம் புதிய வைரஸ் அடையாளம்

கிழக்கு சீனாவில் பல டஜன் பெருக்கு தொற்றிய விலங்கில் இருந்து பரவக்கூடிய புதிய வைரஸ் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லாங்யா ஹெனிபா வைரஸ் என்ற இந்தத் தொற்று ஷஹ்டொங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் 35 பேரிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.

விலங்குகளிடம் இருந்தே இந்த வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. மனிதர்களிடையே பரவுவது தொடர்பில் எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸை முக்கியமாக எலி வகையைச் சேர்ந்த மூஞ்சுறுகளில் கண்டறிந்தனர்.

சிங்கப்பூரில் உள்ள டியூக்–என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் லின்பா, ‘இது வரை கண்டறியப்பட்டிருக்கும் வைரஸ்கள் ஆபத்தானவை அல்ல. அதனால் பீதி அடையத் தேவையில்லை’ என்று சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

இருப்பினும், இயற்கையில் இருக்கும் பல வைரஸ்கள் மனிதர்களைத் தாக்க ஆரம்பித்த பின்னர் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வாங் கூறியுள்ளார்.

புதிய வைரஸ் குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தாய்வானின் நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

லாங்யா என்பது ஒரு வகை ஹெனிபா வைரஸ் ஆகும். இவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தாவக்கூடிய ஜூனோட்டிக் வைரஸ் வகையாகும்.

ஜூனோடிக் வைரஸ்கள் மிகவும் பொதுவாகக் காணப்படுபவை. ஆனால் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் அதிகமாகக் கவனிக்கப்படுகின்றன..

Fri, 08/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை