பேரக் குழந்தை பெறாததால் மகனின் மீது தம்பதி வழக்கு

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு தம்பதி, திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் பேரக்குழந்தையைப் பெற்றெடுக்காததற்காக தங்களின் ஒரே மகன் மீதும் அவரின் மனைவி மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்.

சஞ்சீவ் பிரசாத், சாதனா பிரசாத் என்ற அந்தத் தம்பதி, தங்களின் மகனை வளர்ப்பதற்காகச் சேமித்து வைத்திருந்த எல்லாப் பணத்தையும் பயன்படுத்தியதாகக் கூறினர்.

ஓராண்டிற்குள் பேரக்குழந்தை பிறக்கவில்லை. எனவே சுமார் 650,000 டொலர் மதிப்பிலான இழப்பீடு கோருகின்றனர் அந்தத் தம்பதி.

அந்த வினோதமான வழக்கு ‘மனரீதியான துன்புறுத்தல்’ என்னும் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஓய்வுபெறும் காலத்தில் பேரக்குழந்தையுடன் விளையாடலாம் என்ற நம்பிக்கையில் 2016ஆம் ஆண்டில் சுபாங்கி சின்ஹா என்னும் பெண்ணைத் தமது மகனுக்கு மணமுடித்து வைத்ததாக அந்தத் தம்பதி கூறினர்.

ஹரித்வார் நகரில் தாக்கல் செய்யப்பட்ட அந்தத் தம்பதியின் மனுவை மே 17ஆம் திகதி நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sun, 05/15/2022 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை