அமெரிக்காவில் குழந்தை பால் மாவுக்கு தட்டுப்பாடு

அமெரிக்காவில் குழந்தைப் பால் மாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் குழந்தைப் பால் மாவின் இருப்பில்  சராசரியாக 43 வீதம் குறைவாக இருந்தது என டேடாசம்பிலி கூறியது.

பற்றாக்குறையைச் சமாளிக்கப் பால் மாவை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் தெரிவித்தது.

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் குழந்தைப் பால் மாவில் 98 வீதம் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுபவை.

வசதி குறைந்த குடும்பங்கள் அரசாங்கச் சலுகையில் பால் மாவை வாங்கும் செயல்முறையை எளிமைப்படுத்துவது தொடர்பில் மாநிலங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

பால் மாவை இணையத்தில் அதிக விலைக்கு விற்பவர்களைக் கண்காணிக்குமாறும் பைடன் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், நிலைமை எப்போது சீராகும் எனக் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப் பால் மட்டும் கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தாய்ப்பால் கொடுப்பது தாயின் மருத்துவ நிலையையும் சூழலையும் பொறுத்துள்ளது.

 

Sun, 05/15/2022 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை