கறுப்பு மேதினமாக கொண்டாடும் நிலையில் தொழிலாளர்கள்

- மே தின செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான மற்றும் துயரமான தொழிலாளர் தினம் இன்று பிறந்துள்ளது.தற்போதைய பொறுப்பற்ற அரசாங்கம் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எமது நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது.

உழைக்கும் மக்கள் தங்கள் உயிர், இரத்தம், வியர்வை, தியாகம் செய்து, நீண்ட காலமாக இடைவிடாத வெற்றியை நோக்கி கொண்டு சென்ற கசப்பான போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூரும் அடையாள தினமே தொழிலாளர் தினமாகும்.

ஆனால், எங்கள் நாட்டின் தற்போதைய ஆட்சியினால் தொழிலாளர்கள் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.

ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் முழு எதிர்பார்ப்பையும் சிதைத்த அரசாங்கம், இதற்கு முன்னரான வரலாற்றில் எமக்கு காணக்கிடைத்ததில்லை. அரசு மற்றும் தனியார் துறைகளில் உழைக்கும் மக்களின் முழு எதிர்பார்ப்புக்களும் அரசாங்கத்தினால் சூறையாடியாடப்பட்டுள்ளது. அன்றாடம் உழைக்கும் கூலி வேலை செய்யும் மக்களுக்குக் கூட பாதைகளே சொந்தமாகியுள்ளன.

சுகாதாரம், விவசாயிகள், மீன்பிடித்துறை, பெருந்தோட்டங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் உழைக்கும் வர்க்கமும் கடும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். உயிரை பணயம் வைத்து பணியாற்றும் அத்தியாவசிய சேவையார்கள் கூட ஆட்சியாளர்களின் கவனத்திலிருந்து விலகியுள்ளனர்.

எனவேதான், இவ்வாறான நிலையில், கட்சி பேதங்களை மறந்து, இந்நாட்டில் உழைக்கும் அனைத்து மக்களும் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமாக செயற்பாட்டுக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.

எனவே, இம்முறை கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை, இந்த அராஜக ஆட்சியின் கீழ் கொண்டாடப்படும் இறுதி மே தினமாக மாற்றுவதற்கும், பொருளாதார, சமூக,கலாசார,அரசியல் ரீதியாக மேம்பாடுகள் நிறைந்த மற்றும் அபிவிருத்தியடைந்த நாடாக எங்களுடைய தாய் நாட்டை உயர்த்துவதற்கு இருக்கும் மாற்றத்துக்கான சுதந்திர போராட்டத்தை வெற்றிபெறச் செய்யும் பலம் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கட்டும்.

Sun, 05/01/2022 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை