வீதிகளின் ரஷ்ய பெயர்களை மாற்ற உக்ரைன் நடவடிக்கை

உக்ரைனின் சில நகரங்கள் அவற்றின் வீதிகளின் பெயர்களை மாற்றத் திட்டமிட்டுள்ளன.

ரஷ்யாவுடன் தொடர்புடைய பெயர்களைக் கொண்ட வீதிகளுக்கு அந்நடவடிக்கை எடுக்கப்படும். அதையொட்டி 467 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தலைநகர் கியேவ் நகர சபை கூறியது.

ரஷ்ய எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் பெயர் சூட்டப்பட்ட வீதிகளின் பெயர்களும் மாற்றப்படுமெனக் கூறப்பட்டது.

ரஷ்யாவுடனான போர் முடிவடைந்தவுடன் வீதிகளின் பெயர்களை மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தவிருப்பதாகக் கார்கிவ் நகர மேயர் கூறியுள்ளார்.

உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள சில நகரங்கள், அவற்றைத் தற்காத்த இராணுவத் துருப்பினரின் தொடர்பில் புதிய பெயர்களைச் சூட்டியுள்ளன.

ரஷ்யாவுடன் தொடர்புடைய அனைத்து அம்சங்களும் முற்றிலும் நீக்கப்படுமென உக்ரைனின் கலாசார அமைச்சர் ஒலெக்சாண்டர் தச்சென்கோ கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.

Sun, 05/01/2022 - 12:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை