டீசல் வழங்கலில் தனியார் பஸ்களுக்கு முன்னுரிமை

தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை

டீசல் விநியோகிக்கப்படும் போது தனியார் பஸ்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.  எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பஸ்களை இயக்க வேண்டுமாயின் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஏராளமான பஸ்கள் டீசல் பெறுவதற்காக வரிசையில் நிற்பதாக சங்கத்தின் பிரதம செயலாளரான அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். நேற்று 15 வீதமான பஸ்கள் மாத்திரமே இயக்கப்பட்டன. பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு உரிய அதிகாரிகளும் அரசாங்கமும் பொறுகூற வேண்டும் என தெரிவித்த அவர், தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கும் நடைமுறை இதுவரை வகுக்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டார்.

 

Tue, 04/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை