ஷங்காய் நகரில் 26 மில்லியன் மக்களுக்கு கொவிட் சோதனை

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அந்நகரில் வாழும் 26 மில்லியன் மக்களுக்கு கொவிட் பரிசோதனை செய்ய ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீன இராணுவம் சார்பில் வெளியாகும் நாளிதழின் செய்தியின் படி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ மருத்துவர்கள், இராணுவ படையினர் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஷாங்காய் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஷாங்காயில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷங்காய் நகரில் கடந்த மார்ச் 28 ஆம் திகதி தொடக்கம் இரண்டு கட்டமாக பொது முடக்கம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 04/05/2022 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை