டொன்பாஸ் போரை ஆரம்பித்தது ரஷ்யா

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரண்டாம் கட்ட போர் நடவடிக்கையான 'டொன்பாஸ் போர்' ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் ஒட்டுமொத்த முன்னரங்கு பகுதிகளிலும் உக்ரைனிய தற்காப்பு அரண்களை முறியடிக்கும் முயற்சியை ரஷ்யப் படை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'ஒட்டுமொத்த ரஷ்ய இராணுவத்தின் பெரும் பகுதி இந்தத் தாக்குதலில் அவதானம் செலுத்தியுள்ளது' என்று வீடியோ மூலம் உரை நிகழ்த்திய செலென்ஸ்கி தெரிவித்தார். 'எத்தனை ரஷ்ய துருப்புகள் அனுப்பப்பட்டபோதும் கவலையில்லை. நாம் போராடுவோம். நாம் எம்மை பாதுகாப்போம்' என்றார்.

இந்த தாக்குதலுக்கு உக்ரைனியர்கள் தாக்குப்பிடிப்பார்கள் என்று உக்ரைனிய இராணுவ தலைமை பணியாளர் அன்ட்ரி யெர்மக் உறுதி அளித்தார். 'எமது இராணுவம் வலுவாக உள்ளது என்று நாம் நம்புகிறோம்' என்று அவர் கூறினார்.

டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கார்கிவ் வட்டாரங்களில் ரஷ்யப் படையினர் தங்கள் தற்காப்பை முறியடிக்க முயன்றதாக உக்ரைனின் தேசியப் பாதுகாப்பு மன்றம் கூறியது. சில நகரங்களில் ரஷ்யப் படையினர் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறினர்.

வடக்கில் தலைநகர் கியேவில் இருந்து கடந்த மார்ச் மாதம் பின்வாங்கிய உக்ரைனியப் படை, டொன்பாஸ் என்று அழைக்கப்படும் இரு மாகாணங்களில் தரைவழி தாக்குதல்களை நடத்தும் திட்டமாக படைகளை மீண்டும் குவிக்க ஆரம்பித்தது. தலைநகர் உட்பட ஏனைய இலக்குகள் மீது தொலைதூர தாக்குதலையே ரஷ்யா நடத்தி வருகிறது.

இந்த புதிய மோதல்கள் பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சில் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

Wed, 04/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை