84 ஆண்டுகள் வேலை செய்து உலக சாதனை

பிரேசிலைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் பிரஸ்க் நகரை சேர்ந்த 100 வயதான வோல்டர் ஆர்த்மான், தனது 16 வயதில் ரெனக்ஸ் வியூ என்ற புடவை தொழிற்சாலையில் சாதாரண ஊழியராக வேலைக்குச் சேர்ந்த நிலையில் தற்போது அதே நிறுவனத்தின் வியாபார பிரிவின் முகாமையாளராக உள்ளார்.

மெல்ல மெல்ல பணி உயர்வு, அத்துடன் கூடிய சம்பள உயர்வால் நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாத அவர், 84 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றி வருகிறார்.

“வேலையை விரும்பிச் செய்ய வேண்டும். நான் விருப்பத்துடனும் உத்வேகத்துடனுமே வேலையை ஆரம்பித்தேன்” என்று ஆர்த்மான் குறிப்பிட்டார்.

 

Sun, 04/24/2022 - 17:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை