இலங்கையின் நெருக்கடியை தீர்க்க IMF ஆதரவு வழங்க இணக்கம்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் (Gerry Rice) இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவித்திட்டம் தொடர்பான ஆரம்ப தொழில்நுட்ப கலந்துரையாடல்களை சர்வதேச நாணய நிதிய குழு நிறைவு செய்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வருமாறு,

அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் (World Bank) கூட்டங்களின் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவத்தின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்கள், நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழுவை சந்தித்தனர்.

இதன்போது பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான கொள்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  இலங்கைக்கான IMF குழு, இலங்கைத் தூதுக்குழுவுடன் IMF-உதவி வேலைத்திட்டம் பற்றிய ஆரம்ப தொழில்நுட்ப கலந்துரையாடல்களை நடத்தியது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நொசாக்கி,

“ஏப்ரல் 18-22 திகதிகளில், ​​இலங்கை பிரதிநிதிகள் மற்றும் IMF குழு, IMF-உதவித் திட்டத்திற்கான அதிகாரிகளின் கோரிக்கை குறித்து பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை நடாத்தியது.  இலங்கையின் அண்மைய பொருளாதார மற்றும் நிதி அபிவிருத்திகள், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் பாதகமான பாதிப்பை ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் முகம்கொடுப்பதை குறைக்கும் வகையில் வலுவான சமூக பாதுகாப்பு தடுப்பத் திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது. IMF குழு அதிகாரிகள் தங்களுக்கு கடன் வழங்குபவர்களுடன் கூட்டான கலந்துரையாடலில் ஈடுபட இதன் போது தீர்மானித்துள்ளனர்.

"IMF குழு, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு அவர்களின் பொருளாதார வேலைத்திட்டத்தில் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலமும், நெருக்கடிக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பதற்கு ஆதரவாக ஏனைய அனைத்து பங்குதாரர்களுடனும் ஈடுபடுவதன் மூலமும் உதவியளிக்கும்."

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 04/24/2022 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை